எங்கெல்லாம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லும்?
ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இரு தினங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:-
அரசு மருத்துவமனைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை நவம்பர் 11-ம் தேதி வரை வாங்கி கொள்வார்கள்
அஞ்சலகங்களிலும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை 100 நோட்டுகளாக மாற்றலாம்
நவம்பர் 11-ம் தேதி வரை பெட்ரோல் பங்குகள் ரயில் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டு செல்லும்
விமான நிலையங்களில் உள்ள டிக்கெட் மையங்களில் ரூ.500, 1000 நோட்டுகள் நவம்பர் 11-ம் தேதி வரை செல்லும்
ரயில் டிக்கெட் புக்கிங், அரசு பேருந்து மையம் ஆகியவற்றில் மாற்றிக் கொள்ளலாம்
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பால் நிலையங்களில் நோட்டுகள் பெறப்படும்
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply