பாதுகாப்பு வலயத்துள் படையினர் நுழைந்து மீட்டுப்பணியை தொடங்கினர்

அம்பலவன் பொக்கணை மேற்குப் பகுதியில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள 58வது டிவிசன் படையினர் நேற்று (ஏப். 10) மாலை பாதுகாப்பு வலயத்தில் அமைத்திருந்த பல கவச மண் அரண்களை அழித்து அப்பகுதியை விடுவித்துள்ளதாக பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இத்தாக்குதல்களைத் தொடர்ந்து படையினர் நடத்திய தேடுதலின் போது 9 இறந்த புலிகளின் உடல்கள், 22 ரி-56ரக துப்பாக்கிகள்,  ஒரு ஆர்பிஜி, ஒரு பிஸ்டல், மூன்று தொடர்பு சாதனங்கள், 25,000 ரி-56ரக துப்பாக்கி ரவைகள் என்பனவற்றைக் கைபற்றியுள்ளனர். மேலும் இப்பகுதியில் நிலைகொண்டுள்ள விசேட ஸ்னைபர் பிரிவினர்  முன்னரங்கில் காவலில் நின்ற 15 புலி உறுப்பினர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். 

இதேவேளை, புலிகளின் பிடியில் சிக்கியிருந்த 321 சிறுவர்கள், 112 பெண்கள், 173 ஆண்கள் அடங்கலாக 606 பொதுமக்கள் 58வது டிவிசன் படையினரிடம் நேற்று வந்தடைந்துள்ளனர். இவர்களுக்கு படையினர் உணவு மற்றும் உடனடி மருத்துவ வசதிகள் வழங்கி கிளிநொச்சியிலுள்ள இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பாதுகாப்பு வலயத்துக்கு தெற்காக கடமையில் ஈடுபட்டுவரும் 53வது டிவிசன் படையினர் பாதுகாப்பு எல்லையை ஏ-35 (பரந்தன்-முல்லைத்தீவு) பாதையை நோக்கி முன் நகர்த்தியுள்ளனர். நந்திக்கடல் களப்பின் வடக்குக் கரையோரப் பகுதியின் பாதுகாப்பைப் பலப்படுத்துகையில் ஏற்பட்ட மோதலில் பின்பு 4 இறந்த புலிகளின் உடல்கள், 13 ரி-56 ரக துப்பாக்கிகள், மற்றும் ஒரு எம்பிஎம்ஜி துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளதாக  53வது படையணியினர் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply