சிரியாவில் குண்டுவீச்சு, பீரங்கி தாக்குதல்: குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட 20 பேர் பலி

siriya சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான உள்நாட்டுப்போர் தொடர்ந்து 6–வது ஆண்டாக நீடிக்கிறது.  அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷியாவும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள இத்லிப் மாகாணத்தில் நேற்று முன்தினம் கான் ஷெய்கவுன் நகரில் தீவிரமாக குண்டுவீச்சு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 7 குழந்தைகள், 2 கர்ப்பிணிகள் என 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அதிபர் ஆதரவு படை அல்லது ரஷியா படைதான் நடத்தி இருக்கும் என இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு செயல்படுகிற சிரிய மனித உரிமை கண்காணிப்பகம் கூறுகிறது.

 

அதே நேரத்தில் ரஷியா தங்களது விமானம் இத்லிப் மாகாணத்தில் பறந்து, எந்த தாக்குதலிலும் ஈடுபடவில்லை என்று கூறுகிறது. மேலும் இத்லிப் மாகாணத்தின் பார்போ கிராமத்தில் நடந்த வான் தாக்குதல் மற்றும் பீரங்கி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply