சல்மான் கான் விடுதலைக்கு எதிரான ராஜஸ்தான் அரசின் மனு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்பு
இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ‘ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அந்த பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டதாகவும், சல்மான்கான் சுட்டதில் சின்காரா, கலைமான் வகைகளை சேர்ந்த 3 அரியவகை மான்கள் கொல்லப்பட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 25ம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இதனையடுத்து, சல்மான் கானின் விடுதலையை எதிர்த்து ராஜஸ்தான் அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தது.
இந்நிலையில், மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் விடுதலைக்கு எதிராக ராஜஸ்தான் அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
மேலும், சல்மான் கானுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் சல்மான் கானுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply