அங்கவீன படையினரை தாக்கியதும் தவறு, தூண்டிவிட்டதும் தவறு : ரணில் விக்கிரமசிங்க
அங்கவீனமுற்ற படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தவறு. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரை பணி நீக்க தேவையானால் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அங்கவீனமுற்ற படைவீரர்களை தூண்டி விட்டு பிரச்சினை ஏற்படுத்தியதும் தவறு என்று குறிப்பிட்ட அவர் அந்த இடத்துக்கு புத்த மதத்தின் பெயரால் பிக்குமார்கள் சிலர் வந்தது குறித்தும் ஆராய வேண்டியுள்ளது எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
23/2 நிலையியற் கட்டளையின் கீழ், ஜனாதிபதி செயலகத்திற்கருகில் நடைபெற்ற அங்கவீனமுற்ற படைவீரர்களின் ஆர்ப்பாட்டம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஐ.ம.சு.மு. பாராளுனமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் வழங்கிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார், இந்த கேள்விக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் முழுமையான பதிலை இன்று (12) வழங்க இருப்பதாக தெரிவித்த பிரதமர் இந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார். அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து பாதுகாப்பு அமைச்சில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய நிலையில் எவ்வாறு இந்த பிரச்சினை ஏற்பட்டது என்றார்.
யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட போது அங்கிருந்த அனைத்து பொலிஸாரும் கைது செய்யப்பட்டார்கள். இங்கும் அவ்வாறு சட்டம் அமுல்படுத்தாதது ஏன். சம்பந்தப்பட்ட பொலிஸாரை பணி நீக்கவோ கைது செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படுமா என தினேஷ் குணவர்தன எம்.பி. வினவினார்.
பொலிஸாரை பணி நீக்க தேவை என்ன அது தொடர்பில் கவனம் செலுத்த தயாராக உள்ளோம் என்றார். ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய விமல் வீரசிங்க எம்.பி. துடுகெமுனு எள்ளால மன்னர் இடையிலான யுத்தத்தின் போது பிக்குமார் அங்கு தொடர்பட்டிருந்தனர்.
கடந்த இறுதி யுத்தத்தின் போதும் பிக்குமார் தொடர்புபட்டிருந்தனர். பிரதமர் பிக்குமார் பற்றி தவறாக பேசியிருக்கிறார் என்றார். இதற்குப் பதிலளித்த பிரதமர், துடுகெமுனு, பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து சிம்மாசனத்தை பெற முயலவில்லை என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply