கொலம்பியா அரசு, கிளர்ச்சியாளர்கள் புதிய சமரச உடன்பாடு 52 ஆண்டு கால உள்நாட்டு போருக்கு முடிவு

colombia கொலம்பியா அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே புதிய சமரச உடன்பாடு ஏற்பட்டது. இதன்மூலம் 52 ஆண்டு கால உள்நாட்டுப்போருக்கு முடிவு காணப்பட்டுள்ளது. உள்நாட்டுப்போர் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அரசு படைகளுக்கும், ‘பார்க்’ கிளர்ச்சியாளர்களுக்கும் (மார்க்சிஸ்ட் கொரில்லா படையினர்) இடையே 1964–ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வந்தது. இந்தப் போரில் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர்.

45 ஆயிரம் பேர் காணாமல் போனார்கள். 69 லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர்.இரு தரப்பினருக்கும் இடையே கியூபாவில் 4 ஆண்டுகளாக சமரசப்பேச்சு நடந்து வந்தது. இதில் கடந்த செப்டம்பர் மாதம் உடன்பாடு ஏற்பட்டது. கொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், பார்க் கிளர்ச்சியாளர்கள் குழுவின் தலைவர் டிமோசெங்கோ ஜிமெனஸ் ஆகியோர் கையெழுத்திட்ட இந்த உடன்பாட்டை அந்த நாட்டு மக்கள் நிராகரித்தனர்.ஆனால் 52 ஆண்டு கால உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக கொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ் மேற்கொண்ட முயற்சியைப் பாராட்டி அவருக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.புதிய உடன்பாடு சமரச உடன்பாடு, கருத்து வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்டாலும், புதிய உடன்பாட்டை ஏற்படுத்த இரு தரப்பினரும் கியூபாவில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி கண்டது.

இரு தரப்பினருக்கும் இடையே புதிய சமரச உடன்பாடு ஏற்பட்டது. இதை இரு தரப்பினரும் நேற்று முன்தினம் கூட்டாக அறிவித்தனர்.இந்த கூட்டறிக்கையில், ‘‘கொலம்பியாவில் 52 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவரும் விதத்தில் மாற்றங்கள், தெளிவான விளக்கங்கள், பல்வேறு தரப்பினரின் பங்களிப்புகள் ஆகியவற்றை கொண்ட புதிய சமரச உடன்பாட்டை ஏற்படுத்தி உள்ளோம்’’ என கூறப்பட்டுள்ளது.இந்த உடன்பாட்டை பேச்சுவார்த்தையின்போது மத்தியஸ்தர்களாக செயல்பட்ட கியூபா, நார்வே தூதர்கள் ஹவானாவில் நிருபர்கள் முன்னிலையில் வாசித்தனர்.அதிபர் கருத்து

 

இந்த கூட்டறிக்கையில், புதிய உடன்பாடு தொடர்பான விளக்கம் இடம்பெறாதபோதும், கொலம்பியாவின் சமரச பேச்சுவார்த்தை குழுவின் தலைவரான ஹம்பர்டோ டி லா கால்லே, ‘‘இந்த உடன்பாடு, முந்தைய உடன்பாட்டின் பல விமர்சனங்களுக்கு முடிவு கண்டுள்ளது’’ என கூறினார்.புதிய உடன்பாடு குறித்து கொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ் கருத்து தெரிவிக்கையில், ‘‘இது ஒரு சிறப்பான உடன்பாடு. நாங்கள் 57 பிரச்சினைகளில் 56 பிரச்சினைகளை ஆராய்ந்து சரி செய்திருக்கிறோம். மாற்றி அமைத்திருக்கிறோம். இது அமைதிக்கான ஒரு ஆழமான, பரந்த உடன்பாடு ஆகும்’’ என குறிப்பிட்டார்.இந்த உடன்பாட்டைத் தொடர்ந்து கொலம்பியாவில் 52 ஆண்டு கால உள்நாட்டுப்போர் முடிந்து, அமைதிக்கு வழி பிறந்துள்ளது.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply