பிரபல நடிகர் ஜாக்கிசானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது; 56 ஆண்டுகால கலைப்பயணத்துக்கு கவுரவம்

jackisபிரபல நடிகர் ஜாக்கிசானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.ஜாக்கிசான் ஹாங்காங்கில் பிறந்த பிரபல நடிகர் ஜாக்கிசான் கடந்த 1960–ம் ஆண்டு ஹாலிவுட் திரைப்படத்துறையில் நுழைந்தார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், சண்டைப்பயிற்சி கலைஞர் என பன்முக திறமை கொண்ட இவர், 200–க்கும் மேற்பட்ட படங்களி நடித்துள்ளார். குங்பூ உள்ளிட்ட தற்காப்புக்கலைகளை பயின்றுள்ள ஜாக்கிசான், அவற்றை தனது திரைப்படங்களிலும் திறம்பட பயன்படுத்தி வந்தார். அதிரடி சண்டைக்காட்சிகளுடன் கூடிய நகைச்சுவை திரைப்படங்களை வழங்குவதில் ஜாக்கிசான் வல்லவர். இவ்வாறு வெளியான அவரது பல்வேறு படங்கள் உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை அவருக்கு பெற்றுத்தந்தன. கவுரவ ஆஸ்கர் விருது சினிமா உலகில் 56 ஆண்டுகளாக புகழ்பெற்று விளங்கும் ஜாக்கிசான் ஏராளமான உள்நாடு மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளார். எனினும் திரைத்துறையின் மிக உயரிய விருதான ஆஸ்கர் மட்டும் அவருக்கு எட்டாக்கனியாக இருந்து வந்தது. தற்போது 62–வது வயதில் அந்த கனவும் நிறைவேறி உள்ளது.ஜாக்கிசானின் நீண்ட திரையுலக பயணத்தை கவுரவிக்கும் வகையில் அவருக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அவருக்கு விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடந்த வண்ணமிகு விழாவில் இந்த உயரிய விருதை ஜாக்கிசான் பெற்றுக்கொண்டார். அப்போது அவர் ஆற்றிய உரை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மகிழ்ச்சியுடன் அவர் கூறியதாவது:–முடிவு செய்தேன்

 

23 ஆண்டுகளுக்கு முன் ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டோலனின் வீட்டில் இருந்த ஆஸ்கர் விருதை பார்த்து, என்றாவது ஒருநாள் அதை நான் பெற்றுவிட வேண்டும் என முடிவு செய்தேன். ஆனாலும் அதை கையில் ஏந்துவதற்கான காலம் கனியவில்லை.ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை தொலைக்காட்சியில் பார்க்கும் போதெல்லாம், ‘இவ்வளவு படங்களில் நடித்த பிறகும் உனக்கு ஏன் இன்னும் இந்த விருது கிடைக்கவில்லை?’ என என் பெற்றோர் என்னிடம் கேட்பதுண்டு. 56 ஆண்டுகளுக்குப்பின், 200 படங்களுக்கு மேல் நடித்து பல எலும்புகளை உடைத்த பிறகு (சிரிக்கிறார்) தற்போது இந்த விருதை பெற்றுள்ளேன்.ரசிகர்களுக்கு நன்றி

 

இந்த தருணத்தில் எனது ரசிகர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். நான் தொடர்ந்து படங்களை உருவாக்குவதற்கும், ஜன்னல்களுக்கு இடையே குதிப்பதற்கும், அடித்து உதைப்பதற்கும், எனது எலும்புகள் உடைவதற்கும் அவர்கள்தான் காரணம்.  இவ்வாறு ஜாக்கிசான் கூறினார்.இந்த விழாவில் இங்கிலாந்து சினிமா தொகுப்பாளர் அன்னி வி.கோட்ஸ், இயக்குனர் லின் ஸ்டால்மாஸ்டர், ஆவணப்பட இயக்குனர் பிரெடரிக் வைஸ்மென் ஆகியோருக்கும் கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply