ஐரோப்பியன் யூனியனில் சேர கூடாதா?: பெல்ஜியத்திற்கு துருக்கி அதிபர் கண்டனம்

turckyதுருக்கி நாடானது ஐரோப்பிய யூனியனில் சேருவதற்கு 1960-களில் இருந்து முயற்சித்து வருகிறது. இருப்பினும் கடந்த 2005-ம் ஆண்டு முதல் தான் முறையான பேச்சுவார்த்தை தொடங்கியது. தொடர் சிக்கல் காரணமாக இந்த பேச்சுவார்த்தை இழுபறி நிலவி வருகின்றது. இதனிடையே, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு சம்பவம் ஐரோப்பியன் யூனியன் மற்றும் துருக்கி இடையிலான உறவில் பெரிய அளவில் சிக்கலை ஏற்படுத்தியது. ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக ஆயிரக்கணக்கானோரை துருக்கி அரசு கைது செய்துள்ளது. 

இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் சேரும் விவகாரத்தில் பெல்ஜியம் நாட்டிற்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பியன் யூனியனில் சேரும் முயற்சியை துருக்கி கைவிட வேண்டும் என்று பெல்ஜியம் கூறியிருந்தது.

இது குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஐரோப்பியன் யூனியன் எங்களை அதன் அமைப்பில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேறுமாறு நிர்பந்திக்கிறது. அவர்களுக்கு நாங்கள் தேவையில்லை என்றால் அதனை தெளிவுபடுத்த வேண்டும். அவர்கள் கண்டிப்பாக முடிவு எடுக்க வேண்டும்.

எங்களது அமைதி முடிவற்றது அல்ல. தேவைப்பட்டால் நாங்களும் எங்களது மக்களுடன் கலந்து ஆலோசிப்போம்.

துருக்கியில் தற்போது உள்ள எமெர்ஜென்சி உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். ஏன் இப்போது அதனை செய்ய வேண்டும்?.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply