நேபாளத்தில் ரூபாய் நோட்டுக்களை மாற்ற மோடியிடம் உதவி கேட்ட பிரதமர் பிரசண்டா

pirasandaஇந்தியாவில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, தற்போது அவற்றை மாற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பழைய நோட்டுக்களை கொடுத்துவிட்டு புதிய நோட்டுக்கள் வாங்க மக்கள் வங்கிகளில் குவிந்தவண்ணம் உள்ளனர். கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை களையெடுக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான ஏ.டி.எம்.-களில் பணம் இல்லாததால் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுவதால், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பலர் விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய பிரதமர் மோடியை நேபாள பிரதமர் பிரசண்டா தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரூபாய் நோட்டு மாற்றும் நடவடிக்கையை வரவேற்று பாராட்டினார். இதேபோன்று நேபாளத்திலும் பரவலாக பயன்படுத்தப்படும் இந்திய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வசதி செய்து தரும்படி கேட்டார். அப்போது நேபாளம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் களையப்படும் என பிரசண்டாவிடம் மோடி உறுதி அளித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.

இப்பிரச்சனையை தீர்க்க மத்திய வங்கியால் முடியாத நிலையில், பிரதமர் பிரசண்டா தனிப்பட்ட முறையில் முன்முயற்சி எடுத்துள்ளார். நேபாளத்தில் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் தொடர்பாக நேபாள மத்திய வங்கி கடந்த வாரம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்தியா மேற்கொண்ட ரூபாய் நோட்டு மாற்றும் நடவடிக்கையால் நேபாள மக்கள் வசம் உள்ள நோட்டுக்களை மாற்ற முடியாத நிலை உள்ளது. இந்தியாவில் உள்ள நேபாளர்கள் மற்றும் எல்லைப்பகுதிகளில் வசிக்கும் மற்றும் பணியாற்றுவோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply