அமெரிக்காவில் 1 வயது குழந்தையை துப்பாக்கியால் சுட்ட 2 வயது குழந்தை

gun fireஅமெரிக்க நாட்டில் துப்பாக்கி கலாசாரம் பரவி வருகிறது. துப்பாக்கி எல்லோருடைய கையிலும் எளிதாக கிடைப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. துப்பாக்கி வைத்துக்கொள்ள கடும் கட்டுப்பாடுகள் விதித்து சட்டம் இயற்ற வேண்டும் என்று ஜனாதிபதி ஒபாமா வலியுறுத்தி வந்தும் அதில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

 

இந்த நிலையில் அங்கு லூசியானா மாகாணத்தில், பேட்டன் ரூஜ் நகரில், ஒரு வணிக வளாகத்தின் அருகில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்ட காரில் 1 வயது குழந்தையை 2 வயது குழந்தை கைத்துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடந்துள்ளது. இதில் சுடப்பட்ட குழந்தை படுகாயம் அடைந்தது. உடனடியாக அந்தக் குழந்தை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டு தீவிர சிகிச்சை தரப்படுகிறது.

 

இதுபற்றி அந்த நகர போலீஸ் செய்தி தொடர்பாளர் மெக்நீலி நிருபர்களிடம் கூறுகையில், “துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தின் அருகில் வயது வந்த 2 பேர் நின்று கொண்டிருந்தும், இந்த சம்பவம் எப்படி நடந்தது என தெரியவில்லை. 2 வயது குழந்தையின் கையில் துப்பாக்கி கிடைத்தது எப்படி என்பதுவும் புரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என குறிப்பிட்டார்.

 

இந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply