பாதாள குழு தலைவர் மொரட்டு ‘ரோஹா’ கைது

arestகொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் குற்றச் செயல்கள் பலவற்றில் தொடர்புடைய மொரட்டு “ரோஹா” என்ற பாதாள உலகக் குழுத் தலைவரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக குருநாகல் பொலிஸார் நேற்று குருநாகல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உத்தரவைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

 

குருநாகலையில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றைசோதனையிடும் போது பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பியோடிய சந்தேக நபர் பின்னர் கைது செய்யப்பட்டார். மொரட்டு “ரோஹா”விடம் பொலிசார் இதுவரை அவர் செய்த குற்றச்செயல்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய பாதாள உலகக் குழு குற்றவாளிகள் தொடர்பில் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களம், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு, கொழும்பு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் 12 பொலிஸ் நிலையங்கள் மேற்படி பாதாள உலகக் குற்றவாளியை தேடி வலை விரித்திருந்த நிலையில் அவரை எதிர்பாராதவிதமாக சுற்றிவளைக்க முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவரோடு மேற்படி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட பாதாளக்குழு நபர் குருநாகலில் இருந்து கொழும்புக்குத் தப்பிச் சென்றுள்ளார். அவர் தொடர்பான தகவல்கள் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளதுடன் அவரை விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

மொரட்டு “ரோஹா” கைது செய்யப்பட்ட பின் அவரை விசாரணை செய்வதறகு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு, குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று குருநாகலுக்குச் சென்றுள்ளது. அவர் குற்றச் செயல்களைச் செய்துவிட்டு தப்பியோடி மறைந்திருந்த கண்டியிலுள்ள ஒரு இடத்தையும் பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

 

அந்த இடம் பொலிஸாரின் கவனத்துக்குட்பட்டுள்ளதைத் தெரிந்து கொண்ட மேற்படி நபர் அவரது மனைவி, மற்றும் பிள்ளைகளை கொழும்புக்கு அனுப்பிவிட்டு குருநாகல் ஹோட்டலொன்றில் தங்கியிருந்துள்ளார். அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்து போனவர்கள் அவருடன் சம்பந்தப்பட்டவர்கள் குருநாகல் பகுதியில் பாதாள உலக செயற்பாடுகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தார்களா? என்பவை பற்றி பொலிஸார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply