மஹிந்த ராஜபக்ஷவின் 71 ஆவது பிறந்த நாள் இன்று

mahindaமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 71 ஆவது பிறந்த நாள் இன்று (18) கொண்டாடப்படுகின்றது. இவரது பிறந்த நாளை முன்னிட்டு சமய, வழிபாட்டு நிகழ்வுகள் பல கூட்டு எதிர்க் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்றும் நாளையும் நாளை மறுதினமும் இந்த நிகழ்வுகள் பல இடம்பெறவுள்ளன. களனி ரஜமகா விகாரை, அனுராதபுர புன்னிய மதஸ்தானங்களில் வழிபாடு, முஸ்லிம், இந்து சமய வழிபாட்டு நிலையங்களில் பிரார்த்தனைகள் என்பனவும் இடம்பெறவுள்ளன.

அனுராதபுரத்தில் நாளை மறுதினம் (20) இந்து, இஸ்லாமிய விசேட சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க் கட்சியின் அரசியல் ரீதியான விசேட அறிவிப்புக்கள் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தில் உத்தியோகபுர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே அக்கட்சியின் பலராலும் ஹேஷ்யம் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply