சிறுநீரகங்களில் மதமுத்திரை கிடையாது: சுஷ்மா விளக்கம்

susmaசிறுநீரகம் செயலிழந்ததால் மாற்று சிறுநீரகத்துக்காக காத்திருக்கும் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு தங்களது சிறுநீரகங்களை தானமாக அளிக்க பொதுமக்களில் பலர் ஆர்வம்காட்டி வருகின்றனர். சிறுநீரகம் செயலிழந்ததால் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை பரிசோதனை நடைபெற்று வருகிறது அவர் விரைவில் குணமடைய கட்சி தலைவர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர். வாழ்த்து தெரிவித்துள்ள அனைவருக்கும், சிறுநீரகத்தை தானமாக தர முன்வந்த நண்பர்களுக்கு சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

 

மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏப்ரல் மாதம் நிமோனியா காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதை தொடர்ந்து அவ்வப்போது உடல் உபாதை காரணமாக பரிசோதனை செய்து வந்தார்.

 

இந்நிலையில் 64 வயதான அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் 7-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் சுஷ்மா சுவராஜுக்கு பொதுமக்கள் பலர் தங்களது சிறுநீரகத்தை தர முன் வந்துள்ளனர்.

 

ராகுல் வர்மா என்பவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘‘மரியாதைக்குரிய சுஷ்மா சுவராஜ், என்னுடைய ரத்தம் ‘பி பாசிட்டிவ்’ வகை தான். உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடைய சிறுநீரகத்தை தங்களுக்கு தானமாக தர தயாராக உள்ளேன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்’’ என்று தெரிவித்துள்ளார்.

 

மோகன் குமார் என்பவர் சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கு எனது தந்தை அவருடைய கிட்னியை தானமாக தர முன்வந்துள்ளார் தொடர்புக்கு 08280299113 என்ற எண்ணை கொடுத்துள்ளார்.

 

மன்மோகன் கச்சுரு என்பவர் என்னுடைய ரத்த பிரிவு ஏ + (வயது 67) சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கு எனது கிட்னியை தரத்தயார் என்று கூறியுள்ளார்.

 

தனக்கு சிறுநீரகத்தை தானமாக தர முன்வந்த நண்பர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்த சுஷ்மா சுவராஜ், மருத்துவமனையில் இருந்து விரைவில் வீடு திரும்புவேன் என்றும் நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.

 

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள எக்கால்கோர் கிராமத்தை சேர்ந்த இளம்வயது விவசாயி ஒருவரும் சுஷ்மாவுக்கு தனது சிறுநீரகத்தை தானமாக அளிக்க முன்வந்துள்ளார்.

 

விவேக் விஷ்னோய் என்ற அந்த வாலிபர் இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆபத்தில் இருப்பவர்களுக்கு தனது உதவிக்கரத்தை நீட்டுவதில் எப்போதுமே முன்னுரிமை அளித்துவந்த சுஷ்மா சுவராஜ், ஆர்ப்பாட்டம் இல்லாமல் வெகு அமைதியாகவும், அடக்கமாகவும் செயலாற்றி வருவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

 

குறிப்பாக, வளைகுடா நாடுகளில் சிக்கித்தவித்த இந்திய தொழிலாளர்களை தாய்நாட்டுக்கு மீட்டு அழைத்துவர அவர் ஆற்றிய பணி மிகமுக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிட்டிருந்த விவேக் விஷ்னோய், அவரது இந்த உதவும் மனப்பான்மைக்காக என் தாய்நாட்டுக்கு செய்யும் கைமாறு கருதாத உதவியாக சுஷ்மா சுவராஜுக்கு எனது சிறுநீரகத்தை தானமாக தர தீர்மானித்துள்ளேன்’ என பதிவிட்டு தனது கைபேசி எண்களையும் வெளியிட்டிருந்தார்.

 

அரசியல்வாதிகள் மற்றும் மத்திய மந்திரிகள் பலர் இதுபோல் நோய்வாய்ப்பட்டிருந்த காலங்களில் அவர்களுக்கு கிடைக்காத பொதுமக்களின் இந்த ஒத்துழைப்பு தற்போது சுஷ்மா சுவராஜுக்கு கிடைத்து வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், இஸ்லாமியர்களான நியமத் அலி ஷேக், ஜான் ஷா மற்றும் முஜிப் அன்சாரி ஆகியோரும் நேற்று சுஷ்மா சுவராஜுக்கு தங்களது சிறுநீரகங்களை தானமாக வழங்க முன்வந்துள்ளனர்.

 

இவர்களில் தனது விருப்பத்தை சுஷ்மாவுக்கு ‘டுவிட்டர்’ மூலம் தெரிவித்திருந்த உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முஜிப் அன்சாரி, ‘நான் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளர். ஆனால், நீங்கள் எனக்கு தாய் போன்றவர். உங்களுக்கு எனது இரு சிறுநீரகங்களையும் தானமாக அளிக்க விரும்புகிறேன். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply