கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடு வலுக்கிறது

பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்திய அரசாங்கம் விடுத்த அழைப்பை நிராகரித்தமையால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் கருத்து முரண்பாடுகள் வலுவடைந்து வருவதாக நம்பகரமாகத் தெரிய வருகின்றது. இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் விடுத்த அழைப்பை நிராகரித்தமையால் கூட்டமைப்பு பிளவை நோக்கி இட்டுச்செல்லப்படுவதாகத் தகவல்கள் தெரிவித்தன.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை நிராகரித்தது மாத்திரமல்லாமல், இந்திய அரசின் அழைப்பையும் நிராகரித்தமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இனிமேல் தமிழர் நலன் குறித்து எந்த வொரு செயற்பாட்டையும் முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படலாமென கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் சுட்டிக் காட்டியுள்ளனர். குறிப்பாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்தியாவில் இருந்தவாறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கூட்டமைப்பு இந்தியாவை உதாசீனம் செய்வதானது, அது அவர்களுக்குப் பாதகமான சூழலைத் தோற்றுவிக்கலாமெனத் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தைக்கு வருமாறு விடுத்திருந்த அழைப்பை ஏற்கவேண்டுமென்ற நிலைப்பாட்டிலிருந்த கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்திய வெளியுறவுச் செயலர் மேனனின் அழைப்பையும் ஏற்றிருக்க வேண்டுமென்ற கருத்தை முன்வைத்துள்ளனர்.

ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பான முடிவை கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு முந்தைய நாள் சில எம்.பீ.க்களை ஊடகவியலாளர்கள் தொடர்புகொண்டு வினவியபோது, அவர்கள் முடிவு சாதகமாகவே இருக்குமெனப் பதிலளித்திருந்தமை இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply