ஐ.எஸ். அமைப்பில் இலங்கைவாசிகள் 32 பேர் இலங்கை அரசு அறிவிப்பு
ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். அமைப்பில், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இணைந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் இலங்கையில் நல்ல கற்றறிந்த குடும்பங்களை சேர்ந்த 32 இளைஞர்கள் சிரியா சென்று, ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்து சண்டையிட்டு வருகின்றனர் என தெரிய வந்துள்ளது.
இலங்கை பாராளுமன்றத்தில் இந்த தகவலை அந்த நாட்டின் நீதித்துறை மந்திரி விஜயதாச ராஜபக்சே நேற்று முன்தினம் அறிவித்தார். அப்போது அவர், வெளிநாட்டினர் இலங்கைக்கு வந்து பயங்கரவாதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை அரசு அறிந்திருக்கிறது எனவும் கூறினார்.ஆனால் விஜயதாச ராஜபக்சேயின் அறிவிப்புக்கு இலங்கை முஸ்லிம் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply