திருப்பதி உண்டியலில் புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து குவிந்த வண்ணமாக இருக்கிறார்கள். இங்கு ஒரு ஆண்டுக்கு உண்டியல் ரொக்க பண வசூல் மட்டும் ரூ.1,000 கோடி ஆகும். பிரதமர் நரேந்திர மோடி ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியிட்டு, நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவி வந்தாலும், திருப்பதி கோவில் உண்டியல் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிய வந்துள்ளது.
இதுபற்றி அந்த கோவிலின் மக்கள் தொடர்பு அதிகாரி தாலரி ரவி கூறும்போது, “9-ந்தேதியில் இருந்து 10 நாட்களில் உண்டியலில் ரூ.30 கோடியே 36 லட்சம் வசூலாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஆன வசூலை விட இது ரூ.8 கோடி அதிகம். ஒரு நாளில் அதிகபட்ச வசூல், கடந்த 17-ந் தேதி வசூலான ரூ.3 கோடியே 53 லட்சம். குறைந்த வசூல் என்றால் 10-ந்தேதி ரூ.2 கோடியே 28 லட்சம் வசூலானதுதான்” என்று கூறினார்.
மேலும், “இப்போது புதிதாக வெளியாகியுள்ள ரூ.2,000, ரூ.500 நோட்டுகள், பக்தர்களால் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருக்கின்றன” என்றும் அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply