பிரேசிலில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் போலீஸ் அதிகாரிகள் 4 பேர் பலி சுட்டு வீழ்த்தப்பட்டதா?

bresilபிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் குற்றச்செயல்களால் அவப்பெயர் பெற்ற பகுதி காட்பேவலா. இங்கு போதை பொருள் கடத்தல், ஆள்கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடக்கூடிய ஆயுதம் ஏந்திய நபர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அவர்களின் கொட்டத்தை ஒடுக்க போலீசார் போராடி வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று அங்கு போலீசாருக்கும் ஆயுதம் ஏந்திய நபர்களுக்கும் இடையே கடுமையான சண்டை மூண்டது. தரையில் சண்டையிட்டு வந்த போலீசாருக்கு உதவும் வகையில் ஆயுதம் ஏந்திய நபர்களின் நடமாட்டத்தை கண்காணித்து தகவல் கொடுக்க அந்த பகுதியில் போலீசாரின் ஹெலிகாப்டர் ஒன்று வட்டமிட்டு கொண்டிருந்தது.சற்றும் எதிர்பாராத வகையில் அந்த ஹெலிகாப்டர் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த போலீஸ் அதிகாரிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

 

ஹெலிகாப்டர் தரையில் விழுவதற்கு முன் அங்கு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. எனவே ஆயுதம் ஏந்திய நபர்கள் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.அங்கு போலீசாரின் ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்படுவது முதல்முறை அல்ல. கடந்த 2009-ம் ஆண்டு போதை பொருள் கடத்தல்காரர்கள் போலீஸ் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதும், அந்த ஹெலிகாப்டர் கால்பந்தாட்ட மைதானத்தில் விழுந்து நொறுங்கியதில் அதன் விமானிகள் இருவர் கொல்லப்பட்டதும் நினைவுகூரத்தகுந்தது.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply