புதிதாக 52 மதுபான அனுமதிப் பத்திரங்கள் விநியோகம்
கடந்த வருடத்தில் புதிதாக 52 மதுபான அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மது வரித் திணைக்களத்தின் ஊடாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுற்றுலா மேம்பாட்டு திணைக்களத்தின் அனுமதியுடன் இந்த புதிய அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, 51.7 பில்லியன் லீற்றர் மதுபானம் மற்றும் 125.6 பில்லியன் லீற்றர் பியர் என்பன கடந்த வருடத்தில் உற்பத்திச் செய்யப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனுமதிப்பத்திர கட்டணம் மற்றும் அபராத கட்டணம் ஆகியவற்றின் ஊடாக, 1.6 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply