தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 13ம் 14ம் திகதிகளில் 48 மணிநேர யுத்தநிறுத்தத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 13ம் 14ம் திகதிகளில் மனிதாபிமான யுத்தநிறுத்தமொன்றை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவையைக் கூட்டிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதுடன் அமைச்சரவை முடிவாக இதனை அறிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களை அடுத்து யுத்தநிறுத்தம் ஒன்றுக்குத் தயாராக இருப்பதாக நேற்றைய தினம் ஜீ.ரி.என் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply