பிரபாகரன் பிறந்த நாள் தமிழர்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம்
இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டு போரில் 2009-ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இலங்கையில் தமிழர்கள் பெருவாரியாக வாழ்கிற யாழ்ப்பாணத்தில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் பிரபாகரன் பிறந்த நாள் ‘கேக்’ வெட்டி உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. விழாவில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. மரக்கன்றுகள் நடப்பட்டன.
விழாவில் நூற்றுக்கணக்கான மாணவர்களும், ஆசிரியர்களும், பிற ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
“பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடக்கூடாது, விழாவில் யாரும் கலந்துகொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்தும், அது கண்டுகொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply