ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு கொடூரமான சர்வாதிகாரி: டொனால்ட் டிரம்ப்

tramஃபிடல் காஸ்ட்ரோ, தனது நாட்டு மக்களையே பல தசாப்தங்களாக ஒடுக்கிய ஒரு கொடூரமான சர்வாதிகாரி என அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியூயார்க்கில் காஸ்ட்ரோவைக் குறித்து விவரித்துள்ளார்.ஆனால் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் க்யூபவுடனான ராஜரீக உறவுகளை புதுப்பித்த அதிபர் ஒபாமா, க்யூபாவுடனான தனது நட்புக் கரத்தை மேலும் விரிவுபடுத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா பொதுச் செயலர் பான் கி மூன் கல்வி, எழுத்தறிவு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் கியுபாவின் முன்னேற்றங்களுக்காக ஃபிடல் காஸ்ட்ரோ என்றும் நினைவில் இருப்பார் என தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் ரஷியா ஆகிய இரண்டு நாடுகளும், தங்களது நாடுகள் நல்ல நண்பரை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளன.

கடந்த வருடம் ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்த போப் ஃபிரான்ஸ், க்யூபாவின் தற்போதைய அதிபராக இருக்கும் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிற்கு தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply