விஸ்கான்சின் மாகாணத்தில் மறுஓட்டு எண்ணிக்கை நடவடிக்கைக்கு டிரம்ப் கண்டனம் 

tramஅமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில் மறு ஓட்டு எண்ணிக்கை நடைபெற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். கிரீன் கட்சி வேட்பாளர் மீது அவர் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.குறைந்த வாக்கு வித்தியாசம் அமெரிக்காவில் கடந்த 8–ந் தேதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் ‘பாப்புலர் ஓட்டு’ என்று அழைக்கப்படுகிற மக்கள் ஓட்டுகளை பெருவாரியாக பெற்றாலும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ‘எலெக்டோரல் ஓட்டு’ என்னும் தேர்தல் சபை வாக்குகளை அதிகம் பெற்றதால், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.இந்த தேர்தலில் மிச்சிகன், பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய 3 மாகாணங்களில் டிரம்ப் வெற்றியின் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக உள்ளது.மறு ஓட்டு எண்ணிக்கை

 

மிச்சிகன் மாகாணத்தில் 16 தேர்தல் சபை வாக்குகளும், பென்சில்வேனியா மாகாணத்தில் 20 தேர்தல் சபை வாக்குகளும், விஸ்கான்சின் மாகாணத்தில் 10 தேர்தல் சபை வாக்குகளும் உள்ளன.இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டீன், விஸ்கான்சின் மாகாணத்தில் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்துமாறு கேட்டு மாகாண தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பித்தார். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டது. மறு ஓட்டு எண்ணிக்கைக்காக அவர் 52 லட்சம் டாலர் (சுமார் ரூ.34 கோடியே 84 லட்சம்) நிதி திரட்டியுள்ளார்.தேர்தல் முறையில் ரஷியாவை சேர்ந்த ஹேக்கர்கள் (சட்டவிரோதமாக மோசடி செய்து நுழைகிறவர்கள்) நுழைந்து மோசடி செய்து விட்டதாக கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டீன் குற்றம் சாட்டுகிறார்.ஹிலாரி குழுவும் இணைந்தது

 

மறு ஓட்டு எண்ணிக்கை விவகாரத்தில் கிரீன் கட்சி வேட்பாளருடன் தாங்களும் இணைந்து கொள்வதாக ஹிலாரி தேர்தல் பிரசார குழு அறிவித்துள்ளது.அத்துடன் மிச்சிகன், பென்சில்வேனியா மாகாணத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற தங்களது ஆதரவை அளிப்பதாகவும் ஹிலாரி தேர்தல் பிரசார குழு கூறி உள்ளது.ஊழல் என டிரம்ப் கண்டனம்

 

tramஇந்த நடவடிக்கைகள், தற்போது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் கூறி இருப்பதாவது:–ஒட்டுமொத்தமாக ஒரு சதவீத ஓட்டுக்கும் குறைவாகத்தான் கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டீன் பெற்றுள்ளார். அவர் மறுவாக்கு எண்ணிக்கை என்ற பெயரில் தனது கஜானாவை பணத்தால் நிரப்பிக்கொள்வதற்குத்தான் நிதி திரட்டி உள்ளார். இது ஊழல் ஆகும்.‘‘தேர்தலில் மக்கள் பதில் அளித்து விட்டார்கள். தேர்தல் முடிந்தும் விட்டது’’ என ஹிலாரி கிளிண்டன் தனது தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டபோது குறிப்பிட்டார்.3 மாகாணங்களிலுமே அதிக வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி அமைந்தது. குறிப்பாக பென்சில்வேனியாவில் வித்தியாசம் 70 ஆயிரம் ஓட்டுகள்.எனவே தேர்தல் முடிவுகள் மதிக்கப்பட வேண்டும். அதை எதிர்ப்பதோ, தவறாக பயன்படுத்துவதோ கூடாது.  இவ்வாறு கூறி உள்ளார்.ஜில் ஸ்டின் மறுப்பு

 

தனது கஜானாவை நிரப்புவதற்குத்தான் மறு ஓட்டு எண்ணிக்கை என்ற பெயரால் கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டீன் நிதி திரட்டி ஊழல் புரிந்துள்ளார் என்ற டிரம்பின் குற்றச்சாட்டை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.இப்போது தேர்தல் முடிவுகள் மதிக்கப்பட வேண்டும் என்று கூறுகிற டிரம்ப், தேர்தலுக்கு முன்பாக தேர்தலில் தில்லுமுல்லு செய்வதற்கு முயற்சி நடப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது நினைவுகூரத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply