கொலம்பியா விமான விபத்து: ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

kolambiaதென் அமெரிக்காவில் உள்ள பொலிவியாவில் இருந்து கொலம்பியாவுக்கு நேற்றிரவு 81 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் பிரேசிலின் சர்பிசியோன்ஸ் ரியல் கால்பந்து அணியை சேர்ந்த வீரர்களும் பயணம் செய்தனர். அவர்கள் கொலம்பியாவின் மெடெலின் நகரில் நடைபெறும் இறுதி போட்டியில் கலந்து கொண்டு விளையாட புறப்பட்டு சென்றனர்.

கொலம்பியாக நேரப்படி நேற்றிரவு 10.15 மணியளவில் (இந்திய நேரப்படி இன்று காலை சுமார் 7.45 மணி) விமானம் கொலம்பியாவின் மெடலின் அருகே வந்த போது அங்குள்ள மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். எனினும் மோசமான வானிலை காரணமாக மீட்புப்பணிக்காக சென்ற ஹெலிகாப்டர்கள் திரும்பி வந்தன.

வானிலை சீரானதும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. தரை வழி மீட்புப்பணியிலும் வீரர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நொறுங்கி விழுந்த விமானத்தில் பயணம் செய்த கால்பந்து வீரர்கள் உட்பட 76 பயணிகள் இறந்து விட்டதாகவும், 3 கால்பந்து வீரர்கள் உட்பட 5 பேர் உயிர் பிழைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்து போன 76 பேரில் 25 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply