பாகிஸ்தானுடன் ரகசிய பேச்சுவார்த்தை இல்லை: ரஷ்யா

nசி.பி.இ.சி எனப்படுவது சீனா பாகிஸ்தான் இடையேயான பொருளாதார வழிப்பாதை திட்டம் ஆகும். இந்த பொருளாதார வழிப்பாதையில் சுமார் 51 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பல்வேறு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.சி.பி.இ.சி திட்ட உருவாக்கத்தில் பாகிஸ்தானுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக அந்நாட்டு ஊடங்கங்களில் வெளியாகும் செய்திகளுக்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா பாகிஸ்தான் இடையிலான பொருளாதார வழிப்பாதை திட்டத்தில் ரஷ்யா பங்கெடுப்பதற்கான வாய்ப்புகள் தொடர்பாக அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உடனான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு உரிய மதிப்புடன் இருந்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply