எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஏற்றுமதி நாடுகள் முடிவு
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பல ஆண்டுகளாக மிக குறைவாக உள்ளது. இதனால் அதிக அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளன.கடந்த காலங்களில் எண்ணெய் விலை குறையும்போது எண்ணெய் உற்பத்தியை குறைத்து விலையை கட்டுக்குள் வைப்பது வழக்கம். ஆனால் இந்த நாடுகளிடையே ஒற்றுமை இல்லாததால் கடந்த 8 ஆண்டுகளாக உற்பத்தி குறைப்பை செய்யவில்லை.
இந்த நிலையில் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பின் (ஒபெக்) கூட்டம் ஆஸ்திரியாவில் உள்ள வியன்னாவில் நடைபெற்றது. இந்த கூட்டமைப்பில் சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத், நைஜீரியா, அல்ஜீரியா, வெனிசுலா, ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட 14 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கூட்டத்தில் எண்ணெய் உற்பத்தியை 10 சதவீதம் அளவிற்கு குறைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இதன்படி ஒவ்வொரு நாளும் 12 லட்சம் பேரல் எண்ணெய் உற்பத்தி குறைக்கப்படும்.
உலகிலேயே சவுதி அரேபியாவில் தான் அதிக அளவில் எண்ணெய் உற்பத்தி நடைபெறுகிறது. அந்த நாடு 4.5 சதவீதம் எண்ணெய் உற்பத்தியை குறைக்க சம்மதித்துள்ளது. இதனால் சவுதி அரேபியா மட்டுமே 5 லட்சம் பேரல் உற்பத்தியை குறைக்க உள்ளது.
எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அல்லாமல் ரஷியா, அமெரிக்கா போன்ற நாடுகளும் அதிக அளவில் பெட்ரோலை உற்பத்தி செய்கின்றன. இதில் ரஷியா அதிக அளவில் பெட்ரோல் ஏற்றுமதி செய்கிறது.
எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் அங்கம் வகிக்காத நாடுகளும் பெட்ரோல் உற்பத்தியை குறைக்க முன்வந்துள்ளன. அந்த நாடுகள் 6 லட்சம் பேரல் எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளன. ரஷியா 3 லட்சம் பேரல் எண்ணெய் உற்பத்தியை குறைக்க சம்மதித்துள்ளது.
எண்ணெய் உற்பத்தி குறைக்கப்படுவதால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயரும். குறிப்பாக 10 சதவீதத்திற்கு மேல் எண்ணெய் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அனைத்து நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய நிலை உருவாகும். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 110 அமெரிக்க டாலர் வரை இருந்தது. தற்போது ஒரு பேரல் எண்ணெய் விலை 40-ல் இருந்து 42 டாலர் வரை உள்ளது. இனி கணிசமாக இதன் விலை உயரும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply