பெட்ரோல் தீர்ந்ததால் விமானம் கீழே விழுந்தது: கொலம்பியா விபத்து பற்றி புதிய தகவல்

colombia-planeதென்அமெரிக்க நாடான பொலிவியாவில் இருந்து கொலம்பியாவுக்கு கால்பந்து வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் நேற்று முன்தினம் விழுந்து நொறுங்கியது. இதில் 19 கால்பந்து வீரர்கள், 20 பத்திரிக்கையாளர்கள் உள்பட 76 பேர் உயிரிழந்தனர். 5 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். நொறுங்கி கிடந்த விமானத்தில் இருந்து 2 கருப்பு பெட்டிகள் மீட்கப்பட்டன. அதன் மூலம் எப்படி விபத்து நடந்தது என்பது பற்றி ஆய்வு நடந்து வருகிறது. சதி வேலை காரணமாக விமான விபத்து நடந்திருக்கலாம் என கருதப்பட்டது.

ஆனால் இந்த விமானம் பெட்ரோல் இல்லாமல் கீழே விழுந்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது. இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் விமானத்தின் பைலட்டும், விமான கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஊழியரும் பேசிய ஆடியோ ஒன்று ரகசியமாக வெளியே வந்துள்ளது.

அதில், விமான பைலட் விமானத்தில் மின்சார கோளாறு ஏற்பட்டிருக்கிறது. மின்சாதனங்கள் எதுவும் இயங்கவில்லை. பெட்ரோலும் தீர்ந்து வருகிறது நான் உடனடியாக விமானத்தை கீழே இறக்க வேண்டும், அதற்கு வழிகாட்டுங்கள் என்று பேசும் பதிவு இடம்பெற்றுள்ளது.

எனவே விமானம் பெட்ரோல் இல்லாமல் கீழே விழுந்திருப்பது உறுதியாகி இருக்கிறது. விமானம் கிளம்பும் போதே போதிய பெட்ரோல் இல்லாமல் இருந்ததா? அல்லது பெட்ரோல் டேங்கில் கசிவு ஏற்பட்டு வெளியேறி விட்டதா? என்று தெரியவில்லை.

ஆனால் அதிகாரப்பூர்வமாக விபத்து காரணம் பற்றி அறிவிக்க இன்னும் பல நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply