குமார் குணரத்னம் விடுதலை

gumar gunaratnamவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்னம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா விசாவில் இலங்கை வந்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை மூலம் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதாக இவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டார். வழக்கு விசாரணைக்கு பின்னர் கடந்த மார்ச் மாதம் 31ம் திகதி அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைய குமார் குணரத்னத்தின் தண்டனைக் காலம் எதிர்வரும் 9ம் திகதி நிறைவடையவுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் இன்று அவரை சிறையில் இருந்து விடுவிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply