முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு செய்யப்பட்ட சிறு அறுவை சிகிச்சை முடிந்தது இன்னும் 24 மணி நேரம் முதல்வரின் உடல்நிலை கண்காணிக்கப்படும்

jeyaஅப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.  நேற்று இரவு 8 மணி முதல் இன்று காலை 3 மணி வரை  ஜெயலலிதாவுக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. சிறு அறுவை சிகிச்சை சற்று முன் முடிந்தது.

 

முதல்வரின் உடலில் ஏற்படும் எதிர்வினையைப்பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதயநாளத்தில் உள்ள அடைப்பை அறுவை சிகிச்சையின்றி சரிசெய்யக்கூடியது ஆஞ்ஜியோ ஆகும். ஜெயலலிதாவின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அறுவை சிகிச்சை எந்த அளவிற்கு பலன் அளித்திருக்கிறது என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

 

இன்னும் 24 மணி நேரம் முதல்வரின் உடல்நிலை கண்காணிக்கப்படும். உடலில் ரத்த ஓட்டம் உள்ளிட்டவற்றை சீராக்குவதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடலில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு முடிந்தது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply