ஜெயலலிதா தொடர்ந்து மிகவும் கவலைக்கிடம்: அப்போலோ மருத்துவமனை அறிவிப்பு

jeyaதமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக, சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், நேற்று திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், இ.சி.எம்.ஓ. (Extra corporeal Membrane Oxygenation) மற்றும் பிற உயிர் பாதுகாப்பு ஆதரவு துணையுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ.சி.எம்.ஓ. என்பது, இதயம் மற்றும் நுரையீரல் அவையங்கள் முழுமையாக செயல்படாத நிலையில், வெளியில் செயற்கையான கருவி மூலம் ரத்தத்தை சுத்திகரித்து, ஆக்ஸிஜனை உடலுக்குள் செலுத்துவதற்கான மருத்துவ முறையாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply