புத்தள பகுதியில் புலிகள் திடீர் தாக்குதல் ஆறு சிங்கள விசாயிகள் கொலை
இலங்கையின் தென்பகுதியில் உள்ள மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தள பகுதியில் புலிகள் இன்றிரவு நடத்திய தாக்குதல் சம்பவத்தில் ஆறு சிங்கள விவசாயிகள் கொல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தளவில் உள்ள மகாகொடவ என்ற விசாயக் கிராமத்துக்குள் ஆயுதபாணிகளாக இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணியளவில் புகுந்த புலிகளின் ஒரு குழுவினரே இத்தாக்குதலை நடத்தியிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.
ஆறு விவசாயிகள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்ட அதேவேளையில், மேலும் இருவர் படுகாயமடைந்து அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து குறிப்பிட்ட கிராமத்தில் பெரும் பதற்ற நிலை உருவாகியிருக்கின்றது. பெருமளவு காவல்துறையினரும் இராணுவத்தினரும் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டு தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply