ஜனாதிபதி மஹிந்த இராணுவ ஆஸ்பத்திரிக்கு திடீர் விஜயம்
மனிதாபிமான நடவடிக்கையின் போது காயமடைந்த படைவீரர்களின் நலன் விசாரிப்பதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று கொழும்பு இராணுவ ஆஸ்பத்திரிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார். ஒவ்வொரு வார்ட்டுக்கும் சென்ற ஜனாதிபதி அங்கு தங்கி சிகிச்சை பெறும் படைவீரர்களுடன் உரையாடியதோடு அவர்களின் சுகநலன்களையும் விசாரித்தார்.
ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் பாரியார், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோரும் இராணுவ ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தனர். இதன் போது சிங்கள-தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படை வீரர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
குரூர பயங்கரவாதிகளின் பிடியிலுள்ள சகல பொது மக்களையும் மீட்பதற்காகவும் அச்சமற்ற சூழல் ஒன்றை ஏற்படுத்தவும் பாடுபட்டு வரும் படைவீரர்களின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி இங்கு பெரிதும் பாராட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply