கொழும்பு துறைமுகத்தில் கப்பலில் ரூ.1,200 கோடி போதைப்பொருள் பறிமுதல்

ஈகுவடார் நாட்டில் இருந்து கடந்த அக்டோபர் 2-ந் தேதி புறப்பட்ட ஒரு கப்பல், இந்தியாவுக்கு வரும் வழியில் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள துறைமுகத்தை அடைந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த கப்பலில் போதைப்பொருள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், இலங்கை போலீசின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று அதில் சோதனையிட்டனர்.

அப்போது, ஒரு கன்டெய்னருக்குள் 800 கிலோ ‘கோகைன்’ என்ற போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.1,200 கோடி ஆகும். இந்தியாவில் உள்ள ஒரு கம்பெனிக்கு அந்த போதைப்பொருள் அனுப்பப்படுவதாக இருந்தது.

அதை பறிமுதல் செய்த போலீசார், ஈகுவடார், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உளவுத்துறை உதவியுடன் விசாரணை நடத்தி வருகிறார்கள். தெற்கு ஆசியாவில் இதுவரை பிடிபட்ட போதைப்பொருள்களில் இதுவே அதிக மதிப்புடையது ஆகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply