நாட்டின் சொத்துக்கள் விற்பனை என்ற மகிந்தவின் கூற்றை நிராகரிக்கிறது அரசு

நாட்டை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளும் திட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவிக்கும் கூற்றை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.கடந்த அரசாங்கத்தினால் பாரிய அளவில் வெளிநாட்டுகடனை பெற்றுக்கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் போன்ற பாரிய அளவிலான நிறுவன அரச தனியார் பங்களிப்பு திட்டத்தின் மூலம் வருமானத்தை பெறும் நிறுவனமாக மேம்படுத்துவதற்கு சமகால அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

இதனூடாக தாய்நாட்டு சொத்துக்களை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்யப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதாகவும் ஏனைய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பதற்கும் இந்த அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி முன்வைத்த குற்றச்சாட்டை இந்நாட்டை இரண்டு முறை நிர்வகித்த தலைவர் ஒருவர் தெரிவிக்ககூடாது .

பொருளாதாரத்தினால் ஈடுகொடுக்க முடியாத அளவிற்கு கடன்சுமை ஏற்படுத்தி முதலீட்டுக்கு பொருத்தமான வகையில் நன்மைகள் கிடைக்காதவகையிலான நிறுவனங்களுக்காக முன்னாள் அரசாங்கத்தினால் பாரியளவில் பெருந்தொகை வெளி நாட்டுக்கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை. இதனை கடந்த சில வருடங்களில் நாட்டில் இடம்பெற்ற வருமான வீழ்ச்சி தெளிவாக உறுதி செய்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகம் மத்தள விமான நிலையம் போன்ற நிறுவனங்களை அமைப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட வெளி நாட்டவர்களினால் விசேட கோரிக்கைகள் இன்றி ஆலோசனைகள் முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அதற்கான செலவு க்காக சம ர்ப்பிக்கப்பட்ட மதிப்பீட்டு தொகையிலும் பார்க்க இரண்டு மடங்கு தொகை நிர்மாணப்பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமீபத்தில் சீனாவுக்கு விஜயத்தினை மேற்கொண்ட போது . இந்த கடனை முதலீட்டுக்கு மாற்றிய மைப்பதற்கான உடன்பாட்டை சீனாவிடம் பெற்றுக்கொண்டார்.

இதற்கமைவாக வர்த்தக துறைமுகம் என்ற ரீதியில் தோல்விகண்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தை கைத்தொழில் துறை முகமாக அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை துறைமுக அதிகார சபையுடனான கூட்டு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு சீனா வினால் ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேற்பட்ட தொகை முதலீடாக பயன்படுத்தப்படவுள்ளது.

இதன்மூலம் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக அரசாங்கம் செலுத்தவேண்டிய கடன்தொகையில் சுமார் ஒரு பில்லியன் அமெரிக்கடொலர்களை விடுவிப்பதற்கு அரசாங்கத்தினால் முடிந்துள்ளது.

இதேபோன்று மத்தள விமானநிலையம் இலங்கை விமான சேவை நிறுவனம் மற்றும் அம்பாந்தோட்டை முதலீட்டு வலயம் உட்பட்ட பல அபிவிருத்தி திட்டங்கள் அரசாங்கம் மற்றும் தனியார் பங்களிப்புடனான திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்மூலம் அரசாங்கத்தின் சொத்துக்கள் தனியாருக்கோ அல்லது வெளிநாட்டவருக்கோ விற்கப்படவில்லை. இனி ஒருபோதும் இவ்வாறு இடம்பெறாது . முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பின்பற்றி தற்பொழுது பாராளுமன்றத்தில் நடைபெறும் வரவு செலவுத்திட்டத்தில் கலந்துகொள்ளும் அவரது குழு உறுப்பினர்கள் இந்த அரசாங்கத்தினால் அரச நிறுவனங்கள் தனியாருக்கு விற்கத்திட்டமிடப்பட்டிருப்பதாகவும் . அரச சொத்துக்கள் வெளிநாட்டவருக்கு விற்கப்படவிருப்பதாகவும் தெரிவித்து பொதுமக்க ளை தவறான வழியில் இட்டுச்செல்லும் கூற்றுக்களை தெரிவித்து வருகின்றனர் எனத் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply