எம்பி புதிய வாகனங்கள் குறித்து அமைச்சு செயலாளர்கள் கண்காணிப்பில்!
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகை அடிப்படையில் வாகனங்களை பெற்றுக் கொடுக்கும் அரசாங்க வேலைத்திட்டம் நிதி அமைச்சின் செயலாளர் சமரதுங்க மூலமாக கையெழுத்திட பிரதமர் தீர்மானித்துள்ளார். மிகவும் துரிதமாக எடுக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் தொடர்பில் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து விலை மனு கோரி பின்பு அமைச்சரவையின் அனுமதியை பெற்றிருக்கவில்லை.
அத்துடன் வேலைத்திட்டத்தின் ஆரம்பம் முதல் அப்படியாயின் டிசம்பர் முதல் குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு வாகனங்களை பெற்றுக்கொடுக்கும் வரை ரூபா இரண்டு இலட்சம் கொடுப்பனவு பெற்றுக் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் 2016 ஜனவரி மாதம் முதல் ஹர்ஷன ராஜகருணா உட்பட பல உறுப்பினர்களுக்கு வாடகை அடிப்படையில் பல வாகனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் வாகனங்களை பெற்றுக் கொடுத்த உறுப்பினர்களுக்கு தவறாது இரண்டு இலட்ச ரூபாவும் வழங்கப்பட்டிருந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இவ்வேலைத்திட்டம் தொடர்பில் கொள்வனவு செய்யும் வாகனங்கள் பிரித்தானிய காப்புறுதி நிறுவனத்தின் ஊடாக காப்புறுதி செய்யும் வேலைத்திட்டமும் இதில் அடங்கும். இவ்வாறான வேலைத்திட்டம் தொடர்பில் கொடுக்கப்படும் அழுத்தம் தொடர்பில் தற்பொழுது பல அமைச்சின் செயலாளர்கள் வெவ்வேறாக கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆட்சியின் கீழ் இடம்பெற்ற இக் கொடுப்பனவு தொடர்பில் சோர்வடைந்துள்ள அரச அதிகாரிகள் இவ்வாறான செயல்களுக்கு முகங்கொடுப்பது தொடர்பில் பல இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply