முன்னாள் உதவியாளரோடு ஓரினச்சேர்க்கை: மலேசிய எதிர்க்கட்சி தலைவர் மேல் : முறையீடு தள்ளுபடி
மலேசிய நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம் (வயது 69). இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக தனது முன்னாள் அந்தரங்க உதவியாளரோடு இயற்கைக்கு மாறாக ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கோர்ட்டு, அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து 2014-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
அதை எதிர்த்து அவர் மத்திய நீதிமன்றத்தில் மேல்-முறையீடு செய்தார். அந்த மேல்- முறையீட்டை தள்ளுபடி செய்தும், தண்டனையை உறுதி செய்தும் 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக அவர் இன்னும் 16 மாதங்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பினை வழங்கிய மத்திய நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜூல்கெப்லி அகமது மகீனுதீன், “இந்த வழக்கு மேல்-முறையீட்டு பரிசீலனைக்கு உகந்த வழக்கு அல்ல” என்று தீர்ப்பில் கூறி உள்ளார்.
அன்வர், ஒரு காலத்தில் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு பலத்த அச்சுறுத்தலாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பைத் தொடர்ந்து அன்வர் இப்ராகிம், கோர்ட்டு வளாகத்தில் நிருபர்களிடம் பேசுகையில், “நான் ஒரு அப்பாவி. ஆனால் எனது முறையீடுகளை நீதித்துறை கண்டுகொள்ளவில்லை. விடுதலைக்காக நான் மேற்கொண்ட நீண்ட பயணம் இது” என குறிப்பிட்டார்.
தீர்ப்பையொட்டி அன்வர் இப்ராகிமின் மனைவி, பிள்ளைகள், பேரக்குழந்தைகள், ஆதரவாளர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே குவிந்திருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply