அனுப்பிய மெசேஜ்களை திரும்ப பெறும் அம்சம்: விரைவில் வாட்ஸ்அப்பில் அறிமுகம்
உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக அறியப்படும் வாட்ஸ்அப்பில் சில ஜிமெயில் வசதிகள் வழங்கப்பட இருக்கின்றன. இதுகுறித்த தகவல் ட்விட்டர் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியாக வாட்ஸ்அப்பில் நீங்கள் அனுப்பிய மெசேஜ்களை திரும்ப பெறும் வசதி வழங்கப்பட இருக்கிறது. இனிவரும் அப்டேட்களில் நீங்கள் அனுப்பிய மெசேஜ்களை திரும்ப பெறுவது, அதனினை எடிட் செய்வது மற்றும் அதனை முழுமையாக அழித்து விடுவது போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. வாட்ஸ்அப் ஐஓஎஸ் பீட்டா பதிப்பு 2.17.1.869 இல் இந்த வசதிகள் வழங்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.
வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை திரும்ப பெறும் ரீவோக் ஆப்ஷன், வாட்ஸ்அப் மெனுவில் இதுவரை வழங்கப்பட்டிருக்கும் ஆப்ஷன் மெனுக்களுடன் இணைக்கப்படலாம் என ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஸ்கிரீன்ஷாட்களின் மூலம் தெரிகிறது.
அனுப்பிய மெசேஜ்களை திரும்ப பெறும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது என்றாலும், இந்த வசதி மெசேஜ் அனுப்பிய எத்தனை நொடிகளுக்கு வேலை செய்யும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஜிமெயிலில் இந்த ஆப்ஷன் சில நொடிகளில் செயல்படுத்தப்பட வேண்டும். இதனால் வாட்ஸ்அப்பிலும் ரீகால் ஆப்ஷன் குறைந்த நொடிகளுக்கு மட்டுமே செயல்படும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply