மலரும் புத்தாண்டில் புதிய பாதையில் பயணிப்போம்
கால் நூற்றாண்டுகால யுத்தம் எமக்கு ஒரு இலட்சம் அநாதைகளையும் 80 ஆயிரம் விதவைகளையும் 60 ஆயிரம் முடவர்களையும் விட்டுச் சென்றதோடு இரண்டு இலட்சம் விலைமதிப்பற்ற மனித வாழ்வை பறித்துச் சென்றுள்ளது. விதை நெல்லை அவித்துத் தின்றவன் விவசாயி ஆகமாட்டான். சொந்த மக்களின் மரணத்தில் தங்கள் அதிகார இருப்பை காப்பாற்றிக் கொள்பவர்கள் எப்படி அந்த மக்களின் விடுதலைக்காக போராடுபவர்களாக இருக்க முடியும்?
மலரும் இப் புத்தாண்டில் எமது தாயகத்தை பீடித்த ’போர் நோய்’ முற்றாக ஒழியட்டும். இனங்களுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கையும் புரிந்துணர்வும் இப் புத்தாண்டில் இன்னும் வீச்சம் பெற புதிய பாதையில் பயணிப்போம்.
ரெலோநியூஸ் வாசகர் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply