கருணாநிதியின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் ஜனாதிபதி விசாரித்தார்

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல் நலம் குறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் நேரில் வந்து விசாரித்து சென்றனர்.இந்த நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலினை செல்போனில் தொடர்பு கொண்டு கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டு அறிந்தார்.

இதேபோல், தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர்ராவ், கேரள கவர்னர் சதாசிவம் ஆகியோரும் மு.க.ஸ்டாலினை செல்போனில் தொடர்பு கொண்டு கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டு அறிந்தனர்.

மதுரை ஆதீனம் கனிமொழி எம்.பி.யை டெலிபோனில் தொடர்பு கொண்டு கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply