கவர்னர் வித்யாசாகர் ராவுடன் முதல்வர் பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ள முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திடீரென தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை சந்தித்துள்ளார். இன்று மாலை கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்ற முதல்வர் பன்னீர் செல்வம் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது, தலைமை செயலாளர் ராமமோகன ராவ், தமிழக அரசின் ஆலேசாகர் ஷீலா பாலகிருஷணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின் போது என்ன பேசப்பட்டது என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாளை டெல்லியில் மோடியை சந்திக்கும் பன்னீர் செல்வம், தமிழகத்தில் வார்தா புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிக்காக மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க உள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும், பாராளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதா சிலையை வைக்க கோரி இந்த மனுவை பிரதமரிடம், முதல்வர் பன்னீர்செல்வம் அளிக்க உள்ளதாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply