சீனா, நேபாளம் முதல் முறையாக கூட்டு ராணுவப் பயிற்சி

ஆசிய கண்டத்தின் முக்கியமான இரண்டு நாட்டுகளாக சீனாவும், நேபாளமும் இருந்து வருகிறது. இந்நிலையில், சீனா மற்றும் நேபாளம் நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் இணைந்து கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர். இது தொடர்பாக சீன பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் யங்க் யுஜூன் கூறுகையில், “சீனா மற்றூம் நேபாளம் தங்களது போர் பயிற்சி தொடங்குவது குறித்து பேச்சுகியுள்ள்து. இது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

தகவலின் படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த ராணுவ பயிற்சி நடைபெறும் என்றும், நேபாள ராணுவ வீரர்கள் சர்வதேச குழுக்களில் செயல்படுது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளமானது இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஏற்கனவே ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளது. தற்போது முதல் முறையாக சீனாவுடன் பயிற்சியை மேற்கொள்கிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply