தென்இந்தியாவில் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
புத்தாண்டு தினத்தன்று கேரளாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக சமீபத்தில் உளவுத் துறை கண்டுபிடித்தது.இது தொடர்பான தகவல்களை மத்திய உள்துறைக்கு தெரிவித்து உளவுத்துறை உஷார்படுத்தியது.இதைத் தொடர்ந்து தென் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை முதல் விமான நிலையங்களுக்குள் நுழைய பார்வையாளர்ளுக்கு தடை விதிக்கப்பட்டது. இது இன்று வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு அச்சுறுத்தல் உள்ள போதிலும் தென் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் கடும் சோதனைக்குள்ளாக்கப்படுகிறார்கள்.
தீவிரவாதிகள் தங்கள் சதி திட்டத்தை கொச்சி அல்லது கோழிக்கோடு விமான நிலையத்தில் செயல்படுத்த முயற்சி செய்யக்கூடும் என்று உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. இதையடுத்து அந்த இரு விமான நிலையங்களிலும் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தீவிரவாதிகள் விமானத்தை கடத்தி நாச வேலைகளில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக அதற்கு ஏற்ப கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply