பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடாத புதினுக்கு டொனால்டு டிரம்ப் பாராட்டு

ரஷ்ய அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றியதற்கு பழிவாங்கும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளமாட்டோம்  என்று புதின் கூறியதற்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷியா நேரடியாக தலையிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, ‘ரஷிய அரசுடன் தொடர்புடையவர்கள், ஹிலாரியின் ஜனநாயக கட்சி தேசிய குழு மற்றும் ஹிலாரி பிரசார குழு தலைவர் பிரசாரம் தொடர்பான ஆயிரக்கணக்கான இ–மெயில்களை இணையதளத்தில் திருட்டுத்தனமாக புகுந்து திருடி, விக்கி லீக்ஸ் இணையதளத்தின் மூலம் கசிய விட்டனர். ஹிலாரி தோற்பதற்காகவும், டிரம்ப் வெற்றி பெறுவதற்காகவும் இதை செய்துள்ளனர்’ என தெரியவந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டார். அத்துடன், ரஷியா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.இருந்தபோதிலும், அமெரிக்காவின் குற்றச்சாட்டை ரஷியா தொடர்ந்து மறுத்து வருகிறது. டிரம்பும் மறுத்துள்ளார்.இந்த நிலையில், வாஷிங்டனில் உள்ள ரஷிய தூதரகத்திலும், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ரஷிய துணை தூதரகத்திலும் உள்ள 35 ரஷிய அதிகாரிகள் 72 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டு, ஒபாமா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.அத்துடன், அமெரிக்காவில் மேரிலாந்துவிலும், நியூயார்க் நகரிலும் உள்ள 2 ரஷிய தூதரக வளாகங்களை மூடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு உடனடியாக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply