எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
2017ஆம் ஆண்டானது இந்நாட்டின் வரலாற்றில் மிக முக்கிய ஆண்டாக அமையுமென நம்புகின்றேன். முன்வைக்கப்படவுள்ள புதிய அரசமைப்பின் ஊடாக, எமது தேசியப் பிரச்சினைக்கு நிலையானதும் நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடியதுமான தீர்வொன்றை 2017 ஆம் ஆண்டிலே அடைய வேண்டுமென எதிர்பார்க்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
2017ஆம் ஆண்டானது இந்நாட்டின் வரலாற்றில் மிக முக்கிய ஆண்டாக அமையுமென நம்புகின்றேன். முன்வைக்கப்படவுள்ள புதிய அரசமைப்பின் ஊடாக, எமது தேசியப் பிரச்சினைக்கு நிலையானதும் நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடியதுமான தீர்வொன்றை 2017 ஆம் ஆண்டிலே அடைய வேண்டுமென எதிர்பார்க்கின்றேன்.
எமது மக்களிடையே பல விடயங்களில் பன்முகத்தன்மைக் காணப்படுகின்ற போதிலும்கூட, எதிர்கால சந்ததியினருக்காக அமைதியான சௌபாக்கியமிக்க தேசமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு அவ்வாறான பன்முகத்தன்மைகளை தடையாக அமைத்துக்கொள்ள வேண்டாமென இந்நாட்டு மக்கள் அனைவரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அமைதியும் செழிப்பும் பொருந்திய தேசமொன்றைக் கட்டியெழுப்புவதற்காக இந்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள், சமயத் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரிடமும் ஒன்றிணைந்து கைகோர்க்குமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.
கிடைத்துள்ள இப்பொன்னான வாய்ப்பை கைநழுவவிடாது பயன்படுத்திக்கொள்வதற்கு நாம் இவ்வாண்டிலே திடசங்கற்பம் பூணுதல் வேண்டும்.
உங்கள் அனைவருக்கும் பிறந்துள்ள புத்தாண்டானது மகிழ்ச்சியானதாகவும் சௌபாக்கியமானதாகவும் அமைய வாழ்த்துகின்றேன் என தனது வாழ்த்தசெய்தியில் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply