இந்தோனேசிய கப்பலில் தீ விபத்து: 20 பேர் பலி; காயம் 17
ஜகார்தா அருகே கடல் பகுதியில் பயணிகள் கப்பல் தீப்பிடித்ததில், 20 பேர் உடல் கருகி இறந்தனர். 17-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் மாரா ஆங்கி துறைமுகத்தில் இருந்து திடங் தீவுக்கு ஸரோ எக்ஸ்பிரஸ் பயணிகள் கப்பல் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சற்று நேரத்தில் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஃபைபர் பொருட்களால் வடிவமைக்கப்பட்ட கப்பிலின் பல்வேறு பகுதிகளுக்கு தீ பரவியது.
எனினும், கப்பலின் இயக்கத்தில் எந்த பாதிப்பும் இல்லை. இதனால், கப்பல் மீண்டும் ஜகார்தாவுக்கு திருப்பப்பட்டது. பேரிடர் மேலாண்மைக் குழுவினர் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு, பெரும்பாலான பயணிகளை உயிருடன் மீட்டனர்.
எனினும் கப்பலில் பயணம் செய்த 20 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் கப்பலில் இருந்து மீட்கப்பட்டன. தவிர, 17 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கப்பலில் மொத்தம், 200 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் சுற்றுலாப் பயணிகள். பொழுதுபோக்குக்காக திடங் தீவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply