சுவிஸ் அரசாங்கம் வங்கிகளின் கறுப்புப் பண தகவல்களை வழங்க தீர்மானம்

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைப்புச் செய்தவர்களின் இரகசியம் பாதுகாப்பதாக செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கால எல்லை ஜனவரி 01 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால், சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைப்புச் செய்துள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைப்புச் செய்தவர்களின் இரகசிய ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை சுவிஸ் அரசாங்கம் அறிவிப்புச் செய்துள்ளதாகவும், இது தொடர்பான உடன்படிக்கையில் அந்நாட்டு அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இலங்கையர்கள் 200 பேருடைய கறுப்புப் பணம் சுவிஸ் வங்கிகளில் உள்ளதாக கடந்த வருடம் வெளியான பனாமா பத்திர தகவல்கள் மூலம் பகிரங்கமாகிய போதிலும் கூட, சம்பந்தப்பட்ட தகவல்களை வழங்க சுவிஸ் அரசாங்கம் மறுப்புத் தெரிவித்திருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply