வில்­பத்து விடயத்தில் ஜனா­தி­ப­தியை தவ­றாக வழி­ந­டத்­தியுள்ளனர் : ரவூப் ஹக்கீம்

சிறு­பான்மை மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­களில் அகழ்­வா­ராய்ச்சி என்ற போர்­வையில், பௌத்த வழி­பாட்டுத் தளங்கள் அங்கு காணப்­பட்­ட­தற்­கான நினைவுச் சின்­னங்­களும், தட­யங்­களும் இருப்­ப­தாக கூறிக்­கொண்டு சில பேரி­ன­வாத, தீவி­ரவாத சக்­திகள் மேற்­கொண்டு வரும் முஸ்­தீ­பு­க­ளினால் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான முறு­கல்­களும்,விரி­சல்­களும் அதி­க­ரிப்­ப­தற்­கான அச்சம் நில­வு­வ­தாக பிரித்­தா­னிய பிர­புக்கள் சபையின் உறுப்­பினர் நெஸெபி பிர­பு­வி­டத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சுட்­டிக்­காட்­டினார்.

இந்த பர­ப­ரப்­பான நிலை­மையை அர­சாங்கம் உரிய முறையில் தலை­யிட்டு கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர­வேண்­டி­யது அவ­சி­ய­மென்றும் நெஸெ­பி­யிடம் அமைச்சர் தெரி­வித்­துள்ளார்.

பிரித்­தா­னிய பிர­புக்கள் சபையின் உறுப்­பினர் நெஸெபி நேற்று நண்­பகல் முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், நகர
திட்­ட­மிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீமை அவ­ரது இல்­லத்­தில்­சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார்.

அமைச்சர் இது தொடர்பில் பிர­பு­விடம் மேலும் கூறி­ய­தா­வது,

முன்­னொ­ரு­போதும் இல்­லா­த­வாறு சிறு­பான்மை மக்கள் நூற்­றாண்டு காலங்­க­ளாக பாரம்­ப­ரி­ய­மாக வசித்து வரும்
பிர­தே­சங்­களில் தமது வழி­பாட்­டுத்­த­லங்கள் இருந்­துள்­ளன எனக்­கூ­றிக்­கொண்டு அர­சாங்­கத்தை திசை­தி­ருப்பும் வகையில் சமயம் சார்ந்த தீவிர சிந்­தனைப் போக்­குள்ள ஒரு சாரார் தட­யங்­களைத் தேடிக்­கண்டு பிடிக்கும் கைங்­க­ரி­யத்தில்
இறங்­கி­யி­ருக்­கின்­றார்கள்.

வில்­பத்து வனப்­பி­ர­தே­சத்­திற்கு அண்­மையில் முன்னர் பரம்­ப­ரை­யாக வசித்த முஸ்லிம் மக்கள் மீள்­கு­டி­யேற்­றப்­பட்ட பொழுது அதற்கு ஆட்­சே­பனை தெரி­விக்­கப்­பட்­ட­தா­கவும், ஒரு சாரார் வில்­பத்து வனப்­பி­ர­தே­சத்தை மீண்டும் விஸ்­த­ரித்து வர்த்­த­மானி அறி­வித்­தலை வெளி­யி­டு­வ­தற்கு முற்­படும் அள­விற்கு ஜனா­தி­ப­தியை தவ­றாக வழி­ந­டாத்­தி­யி­ருப்­பது பற்­றியும் அமைச்சர் கவலை தெரி­வித்தார்.

இடம்­பெ­யர்ந்த வட­கி­ழக்கு மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பாக கேட்­கப்­பட்ட கேள்­விக்கு பதி­ளிக்கும் போது, யுத்தம் முடிந்த பின்­னரும் கூட அதனால் பாதிக்­கப்­பட்ட மக்­களை மீள்­கு­டி­யேற்­று­வது மந்­த­க­தி­யி­லேயே நடை­பெ­று­கின்­றது.

ஆனால் அர­சாங்­கமும், மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பான அமைச்சும் இந்த விட­யத்தில் கரி­ச­னை­யா­கவே இருக்­கின்­றன.
எதிர்­பார்த்­த­படி வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இதற்­காக போதி­ய­ளவு நிதி­யு­த­விகள் கிடைப்­ப­தில்லை. இந்­தியா ஐம்­ப­தா­யிரம் வீட்டுத் திட்­ட­மொன்றை செய்து வரு­கின்­றது.

இடம்­பெ­யர்ந்த மக்கள் மீள்­கு­டி­யேறும் போது தேவை­யான உட்­கட்­ட­மைப்பு வச­திகள் இல்­லாத நிலையில் பல்­வேறு
சிர­மங்­க­ளுக்கு உள்­ளாக நேரி­டு­கின்­றது. பொது­வாக வடக்கு முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வ­ரையில் வியா­பாரம், தையல் தொழில், விவ­சாயம் போன்­ற­வற்றில் பாரம்­ப­ரி­ய­மாக ஈடு­பட்டு வந்­த­வர்கள் என்ற கார­ணத்­தினால் இதனால் வாழ்­வா­தாரப் பிரச்­சி­னை­க­ளுக்கு உள்­ளா­கின்­றனர்.

அத்­துடன், 25ஆண்­டுகள் இடம்­பெ­யர்ந்து வாழ்­கின்ற சூழ்­நி­லையில் பரம்­பரை தலை­முறை இடை­வெ­ளியின் விளை­வினால் இளை­ஞர்­களும், யுவ­தி­களும் பொரு­ளா­தார சமூகப் பிரச்­சி­னை­க­ளுக்கும் முகம்கொடுக்க வேண்டியுள்ளது அமைச்சர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply