அம்புலன்ஸ் மூலம் நீதிமன்றத்திற்கு வந்த துமிந்த சில்வா

மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்த வழக்குகள் தொடர்பிலேயே அவரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவை சிறைச்சாலையிலிருந்து அம்பியூலன்ஸ் வாகனம் மூலம் நீதிமன்றத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

இதன்போது ஜனவரி மாதம் 26ம் திகதி மீண்டும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

சொத்துக்கள் தொடர்பான விபரங்களை கடந்த 3 வருடங்களாக சமர்பிக்க தவறியமை காரணமாகவே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply