218 இந்திய மீனவர்களை விடுதலை செய்தது பாகிஸ்தான்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்திய மற்றும் பாகிஸ்தான் மீனவர்கள் பரஸ்பரம் இருநாட்டு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர்.அதேபோல் இருநாட்டு மீனவர்களும் பரஸ்பரம் அவ்வவ்போது விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 219 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்து கராச்சியில் உள்ள மாலிர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் 218 இந்திய மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள ஒருவர் நெஞ்சுவலியால் உயிரிழந்ததாக கராச்சியில் உள்ள மாலிர் சிறை அதிகாரி ஒருவர் கூறினார்.
விடுவிக்கப்பட்ட மீனவர்கள் லாகூர் வருகிறார்கள். அங்கிருந்து வாஹா எல்லை வந்து இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
கடந்த 10 நாட்களில் இதுவரை 439 பேர் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக டிசம்பர் 25-ம் தேதி கராச்சி சிறையில் இருந்து 220 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply