கொக்கலை சுதந்திர வர்த்தக வலயத்தில் மாபெரும் தொழிற்சாலை இன்று திறப்பு

கொக்கலை சுதந்திர வர்த்தக வலயத்தில் கையுறை தயாரிக்கும் மாபெரும் தொழிற்சாலை ஒன்று இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் திறந்துவைக்கப்படுகிறது.இதன் மூலம் சுமார் 7 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியடையும் விழாவை ஒட்டியதாகவே இந்தத் திறப்பு விழா நடைபெறுகிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 1994ஆம் ஆண்டு தொழிற்சாலை அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் கொக்கலை சுதந்திர வர்த்தக வலயம் அமைக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் கீழான கடைசி தொழிற்சாலையாக இது அமைந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply