சுவிஸ் நாட்டில் பேர்ணிலுள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்

நோர்வேயில் உள்ள இலங்கை தூதரகம் மீது தாக்குதல் நடாத்தியது போன்று இன்று (ஏப். 13) சுவிஸ் நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில் சிலர் சுவிற்சர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். தூதரகத்தில் இந்தியத் தேசியக்கொடி பறந்து கொண்டிருந்த கம்பத்தையும் தேசியக்கொடியையும் தாக்கி அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்ததை தொடர்ந்து அவர்கள் தூதரகத்திற்கு உள்ளே செல்லும் முயற்சியை கைவிட்டு தப்பிச் ஓடியுள்ளனர்.

இது குறித்து தூதரகத்திற்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் விரைந்து செயற்பட்டதை தொடர்ந்து தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பேர்ணிலுள்ள சுவிஸ் பாராளுமன்றத்திற்கு முன்பாக கடந்த சில நாட்களாக இலங்கை மற்றும் இந்தியா எதிர்ப்பு கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடாத்திவரும் புலிகள் மற்றும் புலிசார்பு அமைப்புக்கள் அங்கிருந்து வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப் பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புலிகளின் அடாவடி நடவடிக்கைகளால் சுவிற்சர்லாந்தில் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவதாகவும், பொதுபோக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதாகவும் ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களையும் வெறுக்கும் நிலைக்கு வித்திடப்படுவதாக பலரும் விசனம் தெரிவிக்கின்றனர். யுத்தத்தில் தமக்கு ஏற்பட்ட தோல்விக்கு காரணம் கற்பிக்க முயலும் புலிகள் வன்னியில் இந்திய இராணுவம் வந்து நிற்பதாகவும் அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் கூறி தமிழக தமிழர்களையும், வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களையும் ஏமாற்றி வருகின்றனர்.

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு நெருக்கடிகளை இன்னும் உருவாக்குவதைத் தவிர வேறெதையும் புலிகள் சாதிக்கப் போவதில்லை என புலி சார்பானவர்களே சலித்துக் கொள்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply